கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வடகொரியா – சீனா இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்காத நாடு என கூறிவரும் ஜனாதிபதி கிம் ஜொன்ங் உன் தலைமையிலான வடகொரிய அரசாங்கம், தடுப்பூசி தொடர்பாக இதுவரை எந்த நாட்டின் உதவியையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.