இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.