தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸின் திரிபான ‘நியோகோவ்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனா வைரஸினை முதன்முதலில் கண்டுபிடித்த சீனாவின் வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகளினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பிறழ்வான நியோகோவ் வைரஸ் புதியதல்ல எனவும், இது 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ்-கோ வைரஸுடன் தொடர்புடையது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நியோகோவ் தென்னாபிரிக்காவிலுள்ள ஒரு வெளவால் கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.