Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Paxlovid மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி, ஜேர்மனி பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க குறித்த மாத்திரை பயன்படுத்தப்படவுள்ளது.
நோய்த்தொற்று அபாயம் அதிகமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க Pfizer, Merck நிறுவனங்களின் மாத்திரைகளுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏற்கனவே அனுமதி வழங்கியள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.