அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாக அமெரிக்காவும் நட்பு நாடுகளும் முழு ஆதரவினை உக்ரைனுக்கு வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரேனைஇணைத்துக்கொள்ள கூடாது என்ற ரஷ்யாவிம் முக்கிய கோரிக்கை அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வொன்றை எட்டும் முயற்சி சந்தேகத்திற்கு உரியதாக மாறியுள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
தமது கோரிக்கை மறுக்கப்பட்டதன் காரணமாக உக்ரைன் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் குறைவடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த செயல்பாடு ரஷ்யா மற்றும் அமெரிக்காவினை பாதிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.