ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற மெல்போனில் நடைபெறும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இதுவரை நடைபெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்களில் 6 முறை ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இருப்பினும் ஒரு போட்டியில் மாத்திரமே ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.