தலிபான்கள் காபூலில் உள்ள முக்கிய பணப் பரிவர்த்தனை சந்தையையும், சராய் ஷாஜதாவில் உள்ள பணப்பரிமாற்று ப்போலி(Boli ) சந்தையையும் மூடியதோடு அங்கிருந்த பண விற்பனையாளர்களையும் வெளியேற்றியுள்ளனர்.
ப்போலி(Boli ) என்பது சராய் ஷாஜதாவிற்குள் இருக்கும் ஒரு பணப்பரிமாற்றுச் சந்தையாகும், அங்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதோடு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ஆப்கானின் பெறுமதியும், மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது.
பல விற்பனையாளர்கள் ப்போலி(Boli ) சந்தை மூடப்பட்டதால் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அத்துடன் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ஆப்கானின் உண்மையான மதிப்பை தீர்மானிப்பதில் சிக்கல்களும் ஏற்படும் நிலைமைகளும் ஏற்படவுள்ளது.
‘இப்போது எங்களின் பணத்தை டொலர்களாகவோ அல்லது பாகிஸ்தான் ரூபாவாகவோ மாற்ற முடியாது. நாம் யாருக்கு விற்க வேண்டும்? என்று கூறுவதற்கு இப்போது செயலில் ப்போலி(Boli ) இல்லை’ என்று குறித்த சந்தையில் பணப்பரிமாற்றத்துடன் தொடர்புயை முகவரான ஃபரித் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்லாமிய எமிரேட் ப்போலி(Boli ) சந்தையை மூடியுள்ளது, அதே நேரத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்’ என மற்றொரு நாணயபரிமாற்றச் செயற்பட்டில் ஈடுபட்டுள்ள ஷெயத் ஹாஷிம் கூறினார்.
கடந்த மாதங்களில், குறிப்பாக டிசம்பரில் டொலருக்கு எதிரான மதிப்பில் ஆப்கானின் பணம் சரிந்தபோது, ப்போலி(Boli ) மூடப்பட்டது. இருப்பினும், சராய் ஷாஜதா சந்தைக்குள் வியாபாரம் செய்ய விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது, விற்பனையாளர்கள் எப்போது மீண்டும் சந்தைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
இஸ்லாமிய எமிரேட்ஸின் முடிவின் அடிப்படையில், சராய் ஷாஜதாவில் உள்ள ப்போலி(Boli ) சந்தை மூடப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப் பெரிய பணப் பரிமாற்ற சந்தையான சராய் ஷாஜதாவில் உள்ள பணப் பரிமாற்றிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய எமிரேட்ஸின் அமைச்சர்கள் பொருளாதார ஆணையகம் மேற்படி சந்தையை மூட முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.