ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாகிஸ்தானே முதன்மைப் பொறுப்பாகும், மேலும் பாகிஸ்தானின் மோசமான செல்வாக்கு மற்றும் தலையீட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் விடுவிக்கப்படும் வரை, சிறந்த நோக்கத்துடன் கூடிய உதவி மற்றும் நிவாரணத் திட்டம் கூட தோல்வியடையும் என டைம்ஸ் ஒப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாடு பட்டினி, பரவலான வேலையின்மை, நீதித்துறையின் முழுமையான வீழ்ச்சி, தகுதிவாய்ந்த மற்றும் படித்தவர்களின் வெளியேற்றம், உட்பட ஒட்டு மொத்தமாக நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானியர்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய கிளர்ச்சியைத் தூண்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், குறிப்பாக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஹக்கானி வலையமைப்பின் உதவியுடன், அரசியல் மற்றும் வெளியுறவு மையத்தின் தலைவர் பபியன் பாசார்ட் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஹகானிகள் அல் கொய்தாவுடன் மட்டுமல்ல, சீனா முதல் செச்சினியா வரையிலான பிற சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடனும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர்.
இந்தப் பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானியர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை, ஏனெனில் இந்த குழுக்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஹகானி வலையமைப்பின் உயர்மட்டத்திளர் தலிபான் படிநிலையில் இணைக்கப்பட்டதை பாகிஸ்தானியர்கள் உறுதிசெய்தனர், எனவே அவர்கள் ஆப்கானிஸ்தானை ஐந்தாவது மாகாணமாக கருத முடியும்.
ஆப்கானிஸ்தானில் காலூன்றுவதை வலுப்படுத்த, பாகிஸ்தானியர்கள் இஸ்லாமாபாத் வழியாக உதவி, நிதி, திட்ட நிதி போன்றவற்றைச் செய்ய ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
உலக சமூகம் மட்டுமின்றி இஸ்லாமிய கூட்டுத்தாபன அமைப்பு நாடுகளுக்கும் பாகிஸ்தான் மீது அதிக நம்பிக்கை இல்லை. இதனால் அத்தரப்புக்கள் பாகிஸ்தானை நம்பத் தயாராக இல்லை, இதனால் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி மூலம் தனது உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், தலிபான் ஆட்சியுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கின்றது. இருப்பினும் முதலில் தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் பாகிஸ்தானின் தீவிர அணுகுமுறை ஆப்கானிஸ்தானில் மேலும் மோசமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.