பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜுல்-ஹக், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இம்ரான் கானின் ஆட்சியின் முடிவுதான் என தெரிவித்துள்ளார்.
லாகூரில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஹக், இம்ரான் கானை ‘சர்வதேச பிச்சைக்காரர்’ என்று குறிப்பிட்டு, நாட்டில் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய விலையை உயர்த்தியதற்காக இம்ரான் கானின் அரசாங்கத்தை கடுமையாக சாடிய அவர், ‘இம்ரான் கானும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட முடியாது’ என்றும் கூறினார்.
‘இந்த நாட்டில் அரசியலில் நேர்மறை அல்லது எதிர்மறையான செயற்பாடுகளுக்கு இடமில்லை, ஏனெனில் இம்ரான் கானின் விலகல் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக ‘மினி-பட்ஜெட்’ என்றும் அழைக்கப்படும் நிதி பிரேரணை 2021 மற்றும் ஸ்டேட் பாங்க் ஒஃப் பாகிஸ்தான் (திருத்தம்) பிரேரணை 2021 ஆகியவற்றை நிறைவேற்றியது.
6 பில்லியன் டொலர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பாகிஸ்தானின் ஆறாவது மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அனுமதி பெறுவதை உறுதி செய்ய துணை நிதிப் பிரேரணையில் ஒப்புதல் அவசியமானது.
இவ்வாறான பின்னணிகளின் படி கான் அரசாங்கம் மீண்டும் பெற்றோலிய விலையை உயர்த்தியுள்ளது. இது நாட்டில் பணவீக்கத்தை உருவாக்கி மக்களின் நிலையை மோசமாக பாதித்துள்ளது’ என அவர் மேலும் கூறினார்.
இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் ‘பொருளாதாரத்தின் வெற்றியாளர்கள்’ என்று கூறுவது வழக்கம் ஆனால் ‘பழைய உதிரிபாகங்களை புதிய இயந்திரங்களில் பயன்படுத்துவதால்’ எதுவும் மாறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.