கொங்கோ குடியரசில், இரண்டு ஐ.நா. நிபுணர்களின் கொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடிஷ்-சிலி ஜைடா காடலான் மற்றும் அமெரிக்கரான மைக்கேல் ஷார்ப் ஆகியோர் 2017 இல் கசாய் பகுதியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
அரசாங்கப் படைகளுக்கும் ஒரு போராளிக் குழுவிற்கும் இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து , அவர்கள் மனித புதைகுழிகள் குறித்து விசாரணையை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களின் மொழிபெயர்ப்பாளரான பெது ஷிண்டெலாவும் கொல்லப்பட்ட நிலையில் கடத்தப்பட்டு 16 நாட்களுக்குப் பின்னர் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
நான்கு வருட விசாரணையின் முடிவில் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 51 போராளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.