2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
‘நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்த நிதியாண்டில் 25 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். நிலங்களை அளவிட விளைச்சலை கணக்கிட ட்ரோன் திட்டம் செயல்படுத்தப்படும். 44 ஆயிரம் கோடியில் நீர் பாசனம் நிறைவேற்றப்படும்.
ஏழைகளுக்கு 18 இலட்சம் வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதுடன், வீடுகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த 18 லட்சம் கோடி ஒதுகீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.