நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்படவில்லை என்றாலும் இது குறித்து பேசப்பட்டதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பெறப்பட்ட பெரும்பான்மையான கடனை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியை சுமார் ஆறு மாதங்களுக்குள் சமாளிக்க முடியும் என நம்புவதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.