இங்கிலாந்தில் உள்ள முன்னணி தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சட்டப்பூர்வ தேவையை, இரத்து செய்ய அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த கொள்கையானது, இங்கிலாந்தில் உள்ள முன்னணி தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியது.
இதற்கமைய அவர்கள் அனைவரும் வியாழக்கிழமைக்குள் முதல் டோஸ் அளவை பெற்றிருக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்திற்குள் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால், அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த கொள்கை எதிர்ப்புகளைத் தூண்டியது மற்றும் சில தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மற்ற பிரித்தானிய நாடுகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டனர்.
இந்தநிலையில் இந்த கொள்கையை முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகையால், தற்போது இந்த காலக்கெடு இனி பொருந்தாது.