இந்தியாவில் விரைவில் 16 புதிய விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில் விமான நிலையம் கட்டப்படும் எனக் கூறினார்.
அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர், பிலாஸ்பூர் மற்றும் ஜக்தால்பூரில் விமான நிலையங்கள் கட்டப்படும் எனவும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்பது விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதாகவும் கூறினார்.
அதேநேரம் ராஜஸ்தானில் ஒரு விமான நிலையம் கட்டப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.