இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் ”சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.25 லட்சம் கோடி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருப்பது அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். விவசாயிகள், ஏழைகள் இதன் மூலம் பயன்பெறுவர்.
கங்கை கரையோரத்தில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படுவதன் மூலம் கங்கை ஆறு இரசாயனம் கலக்காமல் இருக்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.