நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த நிலையில், சீர்செய்யப்பட்டுஷ நேற்று முன்தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த மின் பிறப்பாக்கி நேற்றைய தினம் மறுபடியும் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.