களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.