ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாநகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.