இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இந்தியா சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை நாளை (8) சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு வரை சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் காலமான நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் இரண்டு நாட்கள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது.
அவருக்கு இறுதிச்சடங்கு மற்றும் இரங்கல் தெரிவிக்கும் வகையில், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அதன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது.
இதேநேரம் கோவாவில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிட்ட பேரணியும் இரத்து செய்யப்பட்டது.
வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.