அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டில் அரசாங்கத்திற்கு 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது,
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை முன்னெடுப்பதில் சிரமம் இருந்தால் அதனை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றத்தை நகைச்சுவை இடமாக மாற்றக்கூடாது என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிக்கு நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சதோச நிறுவனத்தின் ஊடக 1400 கெரம்போட்கள் மற்றும் 11000 தாம் போட்களை இறக்குமதி செய்து அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.