கொரோனா தொற்று உறுதியான மேலும் 317 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,345 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை 628,116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதோடு 15,808 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.