உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த வகை நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்தியாவின் பிரதிநிதி திருமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனின் பல பகுதிகளில் வசித்து கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு தான் இந்தியாவுக்கு முக்கியம்.
அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.