தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன.
இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும், ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.