பிரித்தானியாவில் அதிகரித்து வரும் குடிநீர்க் கட்டணங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நேரடியாகத் தலையிடத் தீர்மானித்துள்ளது.
நீர்வழங்கல் நிறுவனங்கள் பொதுமக்களிடம் அறவிடும் கட்டணங்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான குடிநீர் சேவையை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், நீர் மாசுபாடு, கழிவுநீர் பிரச்சினைகள் மற்றும் நீர்க்குழாய் கசிவுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் நீர்வழங்கல் துறையில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை அதிகரிக்க முடியும் எனப் பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.















