கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும், இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியன இரண்டு நோய்களிலும் காணக்கூடிய ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.