மிகப் பெரும் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏறக்குறைய 4,000 சொகுசு கார்கள் தீக்கிரையாகியுள்ளன.
போர்த்துகலின் அசோர்ஸ் தீவுகளின் கடற்கரைக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில், இந்த தீவிபத்து ஏற்பட்டது.
பனாமா கொடியிடப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் கப்பல், ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு வோக்ஸ்வாகன் குழுமத்தின் வாகனங்களை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பலில் போர்ச், அவுடி மற்றும் லம்போகினி உள்ளிட்ட சொகுசு கார்கள் இருந்;ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புதன்கிழமை மாலை இந்தக் கப்பலில் தீப்பிடித்ததாகவும், இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போர்த்துகலின் கடற்படை மற்றும் விமானப்படை, கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர்.
சுமார் 3 கால்பந்து விளையாட்டு மைதானம் அளவு பெரியதான இந்தக் கப்பலில், மொத்தமாக 3965 சொகுசு கார்கள் இருந்தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போர்ச் செய்தித் தொடர்பாளர் கிட்டத்தட்ட 1,100 போர்ச் வாகனங்கள் கப்பலில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.
அவுடி தனது சில கார்கள் கப்பலில் இருந்ததாகக் கூறியது. ஆனால் அவை எத்தனை என்பதைக் குறிப்பிடவில்லை.
இதில், 100க்கும் மேற்பட்ட கார்கள் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்ய இருந்தன.
நேற்று இரவு நிலவரப்படி கப்பலின் தீயை முழுமையாக அணைத்துவிட்டு கப்பலை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2019ஆம் ஆண்டில் கிராண்டே அமெரிக்கா கப்பல் தீப்பிடித்தபோது சுமார் 2000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் எரிந்து மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.