பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் மோசமான வானிலை காரணமாக தடைபட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக நேற்று சனிக்கிழமை பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்ததாக அவசரக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
குறைந்தது 27 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 146 பேர் இறந்துள்ள அதே நேரத்தில் 191 பேர் இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை 900க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சில பகுதிகளில் 41 மோப்ப நாய்களின் உதவியுடன் கைக்கருவிகள் மற்றும் செயின்சாக்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.