அவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது.
இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது.
கொவிட் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், உலகின் கடுமையான பயணத் தடைகளை அவுஸ்ரேலியா விதித்தது.
எனினும், அவுஸ்ரேலியர்கள் மற்றும் சிலர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் விமானங்களில் வரத் தொடங்கினர்.
50க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் திங்கள்கிழமை தரையிறங்கவிருந்தன. மேற்கு அவுஸ்ரேலியாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பயணிகள் நுழைய முடியும். அஙகு மார்ச் 3ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். மேலும் மூன்று தடுப்பூசி அளவுகள் தேவைப்படும்.
2019ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் சுமார் 9.5 மில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
உள்நாட்டு பயணத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையில் வலுவான மீள் எழுச்சி கிடைக்கும் என நம்புவதாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு அமைச்சர் டான் டெஹான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் கடுமையான நடவடிக்கைகள் குடும்பங்களைப் பிரிப்பதற்கும் வணிகங்களை முடக்குவதற்கும் விமர்சனங்களை ஈர்த்தது. ஆனால் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு முன்பே பல இறப்புகளைத் தடுத்த பெருமையும் அவுஸ்ரேலியாவுக்கு உண்டு. அவுஸ்ரேலியாவில் சுமார் 4,900 கொவிட் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.