சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நோர்வே முதலிடத்தில் உள்ளது.
16 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள், 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 37 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.
ஜேர்மனி, 12 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனா, 9 தங்க பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, 8 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 7 வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 25 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
சுவீடன், 8 தங்கபதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து, ஒஸ்திரியா, சுவிஸ்லாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.