கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், புடினின் இந்த அறிவிப்பு அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைத்துள்ளதாக உலக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க வேண்டுமென ரஷ்ய ஆதரவு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே இந்த அறிவிப்பால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த பகுதிகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தார். புதிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.