தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.
முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க மாநகராட்சியில் 3 இடங்களிலும், பேரூராட்சியில் 61 இடங்களிலும், நகராட்சியில் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
அதேபோல் விருதுநகர் நகராட்சி 10 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்டப்டுள்ளன. இதில் திமுக 7 வார்டுகளிலும், அதிமுக, அமமுக காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணிகள் 268 மையங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.