உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப் பேசியில் பேசி, அவருக்கு ஒற்றுமையை உறுதி செய்ததாக ஜேர்மனி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
‘ஐரோப்பாவில் ஒரு நிலப் போர் உள்ளது, அது வரலாற்று புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைத்தோம். இது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்’ என்று பொருளாதார அமைச்சர் ரோபர்ட் ஹேபெக் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், இந்த தாக்குதலால் திகைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதற்கு பிரித்தானியா தீர்மானமாக பதிலளிக்கும் என கூறியுள்ளார்.
அத்துடன், பொரிஸ், அவசரகால அரசாங்க கோப்ரா கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக ;, டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று பின்னர் ஹவுஸ் ஒஃப் காமன்ஸில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.
உக்ரைன் மீதான தனது தாக்குதலின் மூலம் விளாடிமிர் புடின் இரத்தம் சிந்தும் மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீர்மானமான பதிலடி கொடுக்கும் என்றும் ஜோன்சன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி, இந்த நடவடிக்கை ‘நியாயமற்றது மற்றும் நியாயப்படுத்த முடியாதது’ என்று கூறினார்.
‘ஐரோப்பிய மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுடன் நாங்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் உடனடியாக பதிலடி கொடுக்கிறோம்.’ என அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், போலந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பியோட்டர் முல்லர், நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்கான நேரம் இது என்று கூறினார். அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார்.