அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ரஷ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ், ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து வருவதாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் எஞ்சியிருக்கும் சில சுயாதீன வெளியீடுகளில் ஒன்றான நோவயா கெஸெட்டா செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தாக்குதலினானல், துக்கத்துடன், நாங்கள் அவமானத்தை அனுபவிக்கிறோம்.
புடின் ஒரு விலையுயர்ந்த காரின் சாவியைப் போல அணுசக்தி பொத்தானைக் கொண்டு விளையாடுகிறார். பழிவாங்கும் ஆயுதம் பற்றி விளாடிமிர் புடினின் வார்த்தைகளுக்கு வேறு எந்த விளக்கத்தையும் நான் காணவில்லை’ என கூறினார்.
முரடோவ், 2022ஆம் ஆண்டு ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்துக்காக போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
இதனிடையே உக்ரைன் ஜனாதிபதி ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், ‘ரஷ்யா உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பு மற்றும் முக்கிய நகர்ப்புற மையங்களை குறிவைத்து பல திசைகளில் இருந்து வான் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், தரைப்படைகள் மற்றும் சிறப்புப் படைகளை கொண்டு தாக்குதல்களை நடத்தியது.
இது வேண்டுமென்றே, முன்னெடுக்கப்பட்ட நீண்ட கால திட்டமிடப்பட்ட படையெடுப்பு. ரஷ்யாவின் தலைவர்கள் அவர்களின் பொறுப்பற்ற செயல்களுக்கும், இழந்த உயிர்களுக்கும் முழுப்பொறுப்பேற்பார்கள்’ என கூறினார்.