உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய அமைதிக்கு கடுமையான அடி என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளது.
இந்த படையெடுப்புக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி, ‘ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று எர்டோகன் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.
அத்துடன், ‘பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு பெரிய அடி’ என்று விபரித்தார்.
இந்தநிலையில், ரஷ்யா பல திசைகளில் இருந்து முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருவதாகவும், உக்ரைன் படைகள் தாக்குதலை எதிர்த்து வருவதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகிறார்.
‘இது உக்ரைனின் கிழக்கில் மட்டும் அளவிலான ரஷ்ய படையெடுப்பு அல்ல, இது பல திசைகளில் இருந்து முழு அளவிலான தாக்குதல்’ என்று குலேபா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘உக்ரைன் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றித் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது’ என்று அவர் மேலும் கூறினார்.