அதிகவேலை பளு காரணமாக ஊழியர் ஒருவர் இறந்தமை குறித்த கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் சீன கணொளித் தளமான பிலிபிலி ஆயிரம் உள்ளகத் தணிக்கையாளர்களை பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளது.
சீனாவின் இணைவளி கணொளி நேரலை சேவையான பிலிபிலி உள்ளடக்க கண்காணிப்பு குழுவை 40சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக நிக்கி ஏசியா ஊடகத்தின் சிஷ்ஷி ஷுகோ தெரிவித்துள்ளார்.
மியூஸ் முக்சின் என்ற புனைப்பெயர் கொண்ட 25 வயதான ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென உயிரிழந்தார் என பிபிபிலி இணையதளம் அறிவித்தது.
மத்திய நகரமான வுஹானில் உள்ள பிலிபிலியின் அலுவலகத்தில் கிராபிக்ஸ் மற்றும் உரை தணிக்கைக் குழுவின் துணைத் தலைவராக உயிரிழந்த நபர் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் நவீனத்துவங்களுக்குள் அதீதமான வேலைப் பளு அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் வாரத்தில் ஆறு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டும். வேலை நேரத்தைக் குறிக்கும் வகையில் ‘996’ என்று அழைப்பது வழக்கமாகும்.
இதற்கிடையில், பிலிபிலி தளத்தின் பாடல்கள் அலைவரிசையில், கூடுதல் நேரம் அல்லது இரவு நேர வேலை செய்வது மறுதலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அண்மையில் சந்திர புத்தாண்டு விடுமுறையின் போது, ‘ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செய்ததாகவும்’ வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை சிஸ்ஸி கூறினார்.
இதற்கிடையில், பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதற்கான முதன்மைப் பொறுப்பை இணைய தளங்கள் ஏற்க வேண்டும் என சீன அதிகாரிகள் கோருகின்றனர்.
இதன்விளைவாக, வெளியிடப்பட்ட பொருட்களைக் கண்காணிக்க பல்லாயிரக்கணக்கான சென்சார்களை நியமித்துள்ளனர், அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட விதிமுறைகள் மற்றும் குறிப்புகளைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
வேறொரு நிறுவனத்தில் உள்ளகத் தணிக்கையாளராக இருந்ததாகக் கூறிய வெய்போ தளபயனர் கருத்துத் தெரிவிக்கையில், ‘உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினசரி தணிக்கைப் பணியின் அளவை உங்களால் ஒருபோதும் முடிக்க முடியாது,
எனவே நீங்கள் கூடுதல் நேர ஊதியம் இல்லாமல் தானாக முன்வந்து கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும். எனது முந்தைய பணியளிப்பவர் இலவச சிற்றுண்டிகளை மட்டுமே வழங்கினார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.