நாடாளாவிய ரீதியில் நாளை(புதன்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய முன்னதாக வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை இவ்வாறு சுழற்சி முறையில் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.