Roman Abramovich and Alisher Usmanov have been called upon to make their feelings clear (Pictures: Getty)
செல்சி உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் ( Chelsea owner Roman Abramovich) எவர்டன், முதலீட்டாளர் அலிஷர் உஸ்மானோவ் ( Everton investor Alisher Usmanov) ஆகியோருக்கு அழைப்பு விடுத்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தாங்கள் எதிர்கொள்ளப் போகிறார்களா தெளிவுபடுத்த வேண்டும் என தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிரையன்ட் (Labour MP Chris Bryant) கோரியு்ளார்.
rhondda பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரா கிறிஸ் பிரையன்ட் ஏற்கனவே செல்சி அணியை அதன் உரிமையாளர் அப்ரமோவிச்சிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கிற்காக பணம் செலுத்தியதையும், ரஷ்ய அரசு, ஊழல் செயல்பாடுகள், நடைமுறைகளுடன் கொண்டிருந்த பொதுத் தொடர்பையும் வெளிப்படுத்திய பின்னர் இந்தகோரிக்கையை அவர் வலியுறுத்தி இருந்தார்.
சட்டவிரோத நிதி மற்றும் தவறான நடவடிக்கைகளை இலக்காகக் கொண்ட, அப்ரமோவிச் ரஷ்ய அரசுடனான தனது தொடர்புகள், ஊழல்வாதிகளுடனான அவரது பொதுத் தொடர்பு, அரசியல் செல்வாக்கிற்கு பணம் கொடுத்த விடய்கள் குறித்து, கடந்த வியாழனன்று (24.02.22) ஹவுஸ் ஆஃப் கொமன்ஸிடம், கிறிஸ் பிரையன்ட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செல்சி உதைப்பந்தாட்ட அணியின் தலைவர் உள்ளிட்ட இரண்டு பெரு வர்த்தகர்களும் ரஸ்ய உக்ரையின் போர் கறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வெண்டும் என வலியுறுத்தி உள்ளார்.