அமெரிக்காவிடம் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 30 அதிநவீன ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ப்ரிடேட்டர் ட்ரோன்ஸ் எனப்படும் 30 அதிநவீன ஆயுதம் ஏந்திய ஆளில்லா சிறியரக விமானங்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
இந்த ட்ரோன்கள் சீனா, பாக்கிஸ்தான், எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு பணிகளுக்காக இராணுவத்தினர் பயன்படுத்தி சோதனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ட்ரோன்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.