தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டுக்கு வந்தாலே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.என
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இன,மத பேதங்களை ஏற்படுத்த மிகவும் சிறியதொரு குழு முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்.
இருப்பினும் அதற்கு இடமளிக்காமல் இன, மத ஐக்கியத்தை கட்டியெழுப்ப அரசியல் தலைவர்கள் உட்பட இலங்கை மக்களிடம்கேட்டுக்கொண்டார்.
உலகில் தனித்து செயற்பட முடியாது என சுட்டிக்காட்டிய முன்னாள் சபாநாயகர் சர்வதேசத்தின் நம்பிக்கை மற்றும் கெளரவத்தை நாம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.