ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளடங்களாக 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளன.
ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.
எனினும், 141 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.