கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் மேலும் 81 கொரோனா நோயாளிகளுக்கான கட்டில்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்காக வைத்தியசாலைகளில் 13 ஆயிரத்து 599 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றில் இதுவரை 4 ஆயிரத்து 299 கட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.