ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாயர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
மிச்சேல் பச்லேட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்ததன் பின்னர் பதிலளிக்கவேண்டிய நாடு என்ற வகையில் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கை தொடர்பான விவாத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளன.
அதேபோன்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு என்பவனவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றவுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.