கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றது.
முதலமைச்சரின் ஆணையை மீறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை இராஜினாமா செய்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி, மகிழ்ச்சியளித்தாலும் அதனை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் வருத்தமளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆகவே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.