ஐ.நா. மூலம் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அனைத்து இனங்களையும் சமமாக கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு ஐ.நா. முன்வைத்துள்ள தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதனை தட்டிக் கழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது விடின், அனைவரும் ஒன்றிணைந்து இதனை வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும் யாழ் மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும்,ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் கண்காணிப்பை மேற்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.