போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நியாயமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் விரிவாக்கம் குறித்து மொஸ்கோவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.