சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சொத்துகள் மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளில் விசாரணைகளை மேற்கொண்டு சிறந்த அனுபவமிக்க அதிகாரிகளுடன் இந்த விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு பெறப்படுகின்ற பணத்தின் ஊடாக ஈட்டப்படும் சொத்துக்களுக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.