கொரோனா தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொரோனா மரணமாக கருதப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















