உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பித்துள்ளன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து பா.ஜ.க முன்னிலை வகிப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதுடன், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றமை குறுப்பிடத்தக்கது.