முச்சக்கர வண்டிக் கட்டணம் நாளை (13) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டர் 70 ரூபாயாக அதிகரித்துள்ள அதேநேரம் அதற்கு மேலதிகமாக செல்லும் ஒரு கிலோமீட்டருக்கு 55 ரூபாய் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் டொலர் பற்றாக்குறையினால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, தற்போது எரிபொருள் விலை உயர்வினால் பல பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது.