சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் வொஷிங்டன் டி.சி.யில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.
அடுத்த சில வாரங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான இலங்கை அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெறும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் குறித்த சந்திப்புக்கள் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என ஆளுநர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை கையாள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நடவுள்ளதாக பெயரிடப்படாத மூன்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.